வெகு விமர்சையாக நடந்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்...

தெற்கு கொத்தக்கோட்டையில் உள்ள செல்வ விநாயகர் பொற்பனையான் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வெகு விமர்சையாக நடந்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்...

புதுக்கோட்டை | ஆலங்குடி அருகே உள்ள தெற்கு கொத்தக்கோட்டையில் செல்வ விநாயகர் பொற்பனையான் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 28ம் தேதி முதல் கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்ற வந்தது. பின்னர் இன்று காலை ஆறாம் காலயாக பூஜை நிறைவடைந்து யாகசாலையில் வைத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.

மேலும் படிக்க | பழனியில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை... வருவாய் என்ன?!

பின், மேளதாளங்கள் முழங்க புனித நீரை தலையில் சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக கோயில் ராஜகோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்று கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட ஏராளமான பொதுமக்கள் புடை சூழ கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் தீபாரணை காண்பிக்க ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகத்தை தொடர்ந்த அப்பகுதியில் அன்னதான விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படிக்க | வெகு விமரிசையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...