தொடர்ந்து வெளியாகும் வாரிசு பட ஷூட்டிங் க்ளிக்ஸ்...

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படபிடிப்பில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து வெளியாகும் வாரிசு பட ஷூட்டிங் க்ளிக்ஸ்...

தைப்பொங்கலுக்கு முன்னதாக பெரிய நடிகர்களான அஜித் மற்றும் விஜய் நடித்த துணிவு மற்றும் வாரிசு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி தான் இந்த விஜய் வெர்சஸ் அஜித் படங்களுக்கான போட்டி.

மேலும் படிக்க | வாரிசு வெற்றி...படக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட இரகசிய விருந்து...அதுவும் எங்கே தெரியுமா?

90களில் அறிமுகமான இருவரும், தங்களது திரைபயணத்தை ஒன்றாக தொடங்கினாலும், அவர்களது வெற்றி பாதை வித்தியாசமாகவே இருந்தது. இருந்தும், அவர்களுக்கான ரசிகர் கூட்டம் மிகவும் அதிகமானதே.. கிட்டத்தட்ட இருவருக்கு ஒரே அளவிலான ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில், இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், படம் குறித்த சிறு சிறு தகவல்கள், ரசிகர்களால பெரிதாக போற்றப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களின் படம் வெளியாகி, இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரே குஷி...

அந்த வகையில், தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் கிளிக்ஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது என்று சொல்லலாம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ‘வாரிசு’ பட கொண்டாட்டத்தின் போது பலூன் வெடித்து விபத்து...