வாரிசு வெற்றி...படக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட இரகசிய விருந்து...அதுவும் எங்கே தெரியுமா?

வாரிசு வெற்றி...படக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட இரகசிய விருந்து...அதுவும் எங்கே தெரியுமா?

வாரிசு படத்தின் வெற்றியை அடுத்து படக்குழுவினருக்கு நடிகர் விஜய் சிறப்பு விருந்தளித்துள்ளார்.

கலவையான விமர்சனங்களை பெற்ற வாரிசு :

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் “ வாரிசு”. நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்களோடு உருவான இப்படம் கடந்த 11 ஆம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே திரையரங்குகளில் வெளியானது. குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை என்பதால் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ரசிகர்களுக்கு விருந்து :

இருப்பினும், விஜய் ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் குடும்பத்தை மையப்படுத்திய  ஒரு கதையில் நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்து என்றே சொல்லலாம். 

இதையும் படிக்க : மந்தமான விற்பனை... சாலையோரம் போட்டுவிட்டு சென்ற வியாபாரிகள்...!

இரகசிய விருந்து :

இந்நிலையில் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகர் விஜய் சிறப்பு விருந்தளித்துள்ளார். அதில் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த சிறப்பு விருந்தளிக்கும் கொண்டாட்டம் மிகவும் இரகசியமாக நடந்ததாக தகவல் கூறுகின்றது.