“தலைவர் வாய்சே ஒரு வைபு தான்”... மில்லியன் பார்வையாளர்களை எட்டிய “அப்பத்தா”...

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“தலைவர் வாய்சே ஒரு வைபு தான்”... மில்லியன் பார்வையாளர்களை எட்டிய “அப்பத்தா”...

“நானும் ரவுடி தான் டா...” என அனைத்து 90’ஸ் கிட்ஸ்களையும் ரவுடியாக்கிய ஒரு வசனத்தை தந்தது பிரபல நாய் சேகர் கதாபாத்திரம் தான். நகரம் என்ற படத்தின் மூலம், ஒரு கதாபாத்திரத்தை சின்னமாகவே ஆக்கிய சிறப்பு வைகை புயல் வடிவேலுவையே சேரும்.

தனது வித்தியாசமான நடிப்பாலும், தனது iயற்கையான நகைச்சுவை திறனாலும், உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் அவரது காமெடிகளுக்காக ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தொடர்ந்து இரண்டு சகாப்தங்களுக்கு, சினிமாவை தனது கட்டுக்குள் வைத்திருந்த வைகை புயல், சில நாட்கள் சினிமா துறையில் இல்லாமல் போனது.

மேலும் படிக்க | வைகைபுயலின் நாய் சேகர் ரிட்டன்ஸ்...! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல்...!

ஆனால், தென் தமிழ்நாட்டின் பெருமையான வைகை நதி எப்படி என்றும் வரண்டு போகாமல் இருக்குமோ, அதே போல தான் நமது வைகை புயலும். வெகுண்டெழுந்து வெள்ளம் போல, “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற படம் மூலம் தனது 90’ஸ் கிட்ஸ் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை மீண்டும் சிரிக்க வைக்க வருகிறார் “மீம் கிரியேட்டர்களின் கடவுள்” வடிவேலு.

சுராஜ் இயக்கத்தில், நகைச்சுவை கலந்த எண்டெர்டைன்மண்ட் படமாக உருவாகிவரும் இந்த “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிங்கர் சிவாங்கி, ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | என்னது ‘வாரிசு’ பொங்கலுக்கு வெளியாகவில்லையா?- ரசிகர்கள் குமுறல்...

இந்நிலையில், நேற்று, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ”அப்பத்தா” என்ற இந்த பாடல் ஒரு சூப்பர் ஹிட் ராப் பாடலாக உருவாகியுள்ளது. அதில் சிறப்பு என்னவென்றால், இது நமது தலைவரின் குரலிலேயே உருவாகியுள்ளது தான். மேலும், இதனை கோரியோகிராஃப் செய்தது “இந்திய மைக்கெல் ஜாக்சன்” பிரபு தேவா...

“அப்பத்தா...”, “கால் வைக்குற எடமெல்லாம் கன்னிவெடி...”, “பின் லேடன்ட்ட போன்-லயே டீல் பன்னவன்...” போன்ற தனது தனித்துவமான சிறப்பு வசனங்களையே வரிகளாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த பாடல், மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியான 12 மணி நேரத்திற்குள்ளேயே 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

மேலும் படிக்க | நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படம்...! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!

மேலும், இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள், கமெண்ட் பகுதியை தன்வயப்படுத்திக் கொண்டனர். “தலைவர் வாய்சே ஒரு வைபு தான்” என கமெண்ட் செய்த ரசிகர் ஒருவருக்கான கமெண்டே பல ஆயிரம் லைக்குகளைக் குவித்தது என்றால் பாருங்கள்... தனது அழகான நடனம், வயதானாலும், ஸ்டைல் குறையாத தன்மை... என ரசிகர்களை தனது வயதைத் தாண்டி ஈர்த்து வருகிறார் வைகை புயல்.

சூப்பர் ஹிட் பாடலாக இனி அனைத்து மொபைல்களிலும் ரிங்க்டோனாக ஒலிக்க இருக்கும் இந்த பாடல் மில்லியன் பார்வையாளர்களை தாண்டியதால், ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக, மீம் கிரியேட்டர்கள் இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | போலீசாருக்கு தண்ணி காட்டும் நடிகை மீரா மிதுன்...! லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவிருக்கும் காவல்துறை..!