வைகைபுயலின் நாய் சேகர் ரிட்டன்ஸ்...! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல்...!

வைகைபுயலின் நாய் சேகர் ரிட்டன்ஸ்...! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல்...!

வைகைபுயல் மீண்டும் களமிறங்கிய திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். தமிழ் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தொடர்ந்து தன்னை மேம்படுத்திகொண்டு இன்று சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். 

கோடான கோடி ரசிகர்களை கொண்ட வைகைபுயல் வடிவேலு ஒரு குறுகிய இடைவெளிக்கு பிறகு தற்போது, மீண்டும் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். முன்னதாக வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் வைகைபுயலின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை சுராஜ் இயக்குகிறார். நகைச்சுவை கலந்த எண்டெர்டைன்மண்ட் படமாக உருவாகிவரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, சிங்கர் சிவாங்கி, ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் ’அப்பத்தா’ பாடலை நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு பாடியுள்ளார். நடனப்புயல் கோரியோவில் வைகைபுயல் நடித்துள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-- சுஜிதா ஜோதி 

இதையும் படிக்க : நடிகர் கார்த்தியின் 25-வது திரைப்படம்...! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...!