என்னது ‘வாரிசு’ பொங்கலுக்கு வெளியாகவில்லையா?- ரசிகர்கள் குமுறல்...

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பு, சங்கராந்தி அன்று வெளியாகாது என தகவல்கள் வெளியானதில் இருந்து ரசிகர்கள் படு கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

என்னது ‘வாரிசு’ பொங்கலுக்கு வெளியாகவில்லையா?- ரசிகர்கள் குமுறல்...

தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக காத்து வருவது, தளபதி விஜய் நடிக்கும், ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டிற்காகத்தான். அதிலும், பொங்கல் அன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு, அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் மோதி கொள்ள இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக ரசிகர்களே மிக ஆர்வமாக காத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | விஜய் குரலில் " ரஞ்சிதமே " பாடல்...! இணையத்தை கலக்கி வரும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்...!

பொங்கலன்று, ‘தில் ராஜு’ வின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ‘தோழா’ படம் புகழ் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மொழிகளில், ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட படம் விஜய்யின் வாரிசு’. ஆனால், தற்போது, ஆந்திரா மற்றும் தெலங்கனாவில் கொண்டாடப்படும் சங்கராந்தி அன்று படம் வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | விஜய் குரலில் பாட்டு ஒரு பக்கம்.. அஜித் குரலில் டப்பிங் ஒரு பக்கம்.. பொங்கலுக்கு தயாராகும் ரசிகர்கள்...

தெலுங்கு படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த நவம்பர் 12ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், “சங்கராந்தி மற்றும் தசரா போன்ற விழாக்களில், தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும்” என வெளியிடப்பட்டிருந்தது.

குழம்பி போன ரசிகர்கள், இது குறித்த விளக்கம் கேட்டதையடுத்து, அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில்,

“ஒரு தெலுங்கு படத்தை உருவாக்க மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுகிறது. அதனை உருவாக்கி, தயாரித்து வெளியிடுவதற்கு பலர் இங்கு படும் கஷ்டங்களை முன்னிலைப்படுத்தி, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தசரா மற்றும் சங்கராந்தி ஆகிய விழாக்களில், ஆந்திரா மற்றும் தெலங்கனா தியேட்டர்களில், தெலுங்கு படங்கள் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வெளியிடப்படும். அதாவது, தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்கள் மற்ற தியேட்டர்களில் இடம் இருந்தால் வெளியிடலாம்.”

என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | “உதடு வலிக்க கொஞ்சனுமே”... அரை மணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்கள்...

குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு, ஒரு சந்திப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான தில் ராஜு, ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். அதில், “சுத்தமான தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என தெளிவுப்படுத்தி இருந்தார்.

மேலும் படிக்க | பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அதிலும் குறிப்பிட வேண்டியது, அவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களின் வர்த்தக குழுமத்தின் துணை தலைவராக இருப்பது தான். அதிலும், அவரது தமிழ் படமான “வாரிசு” தெலுங்கில் முழுமையாக எடுக்கப்படாமல், தெலுங்கு டப்பிங் படமாக வெளியாக இருப்பதால் தான் இந்த அறிக்கையை தற்போது வெளியிட்டு, தெளிவுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பரபரப்பாக நகரும் யூகி படத்தின் டிரைலர்...!

இதனால், படம் தற்போது தமிழில் மட்டுமே பொங்கலன்று வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாக அஜித் - விஜய் படம் ஒரே நாளில் வெளியாகக் காத்திருந்த தெலுங்கு ரசிகர்களுக்குத் தான் இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | வெளியானது “காதல் தி கோர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...