விஜய் குரலில் பாட்டு ஒரு பக்கம்.. அஜித் குரலில் டப்பிங் ஒரு பக்கம்.. பொங்கலுக்கு தயாராகும் ரசிகர்கள்...

“துணிவு” படத்தின் டப்பிங் தற்போது நடிகர் அஜித் குமார் முடித்துள்ளதாக அஜித் குமாரின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

விஜய் குரலில் பாட்டு ஒரு பக்கம்.. அஜித் குரலில் டப்பிங் ஒரு பக்கம்.. பொங்கலுக்கு தயாராகும் ரசிகர்கள்...

துணிவு படத்தின் அப்டேட்டுகள் சமீபத்தில் எதுவுமே வெளியாகாத நிலையில், தற்போது நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இது தற்போது படு வைரலாகி ரசிகர்களைக் குஷி படுத்தி வருகின்றனது.

போனி கப்பூர், எச்.வினோத்துடன் வலிமைக்கு அடுத்து இரண்டாவது முறையாக இணையும் அஜித் குமாரின் படம் தலைப்பு தான் “துணிவு”. பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு பெரியளவில் தற்போது ப்ரொமோஷன்கள் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | “உதடு வலிக்க கொஞ்சனுமே”... அரை மணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்கள்...

பொதுவாகவே அஜித் குமார் படங்களுக்கு வெளியாகும் வரை தனிப்பட்ட முறையில் ப்ரொமோஷன்கள் எதுவும் இல்லையென்றாலும் இந்த் படத்திற்கு ரசிகர்கள் படு ஆவலாக காத்து வருகின்றனர். ஏன் என்றால், இந்த படம், தளபதி விஜயின் “வாரிசு” படத்துடன் பொங்கலன்று மோத இருக்கிறது.

அதனால், அடுக்கடுக்காக வரும் வாரிசு அப்டேட்டுகளுக்கு மத்தியில் அஜித் குமாரின் ஒரு போட்டோவாவது வெளிவராதா என வாய் பிளந்து சோகத்தில் காத்திருந்த ரசிகர்களின் ஆர்வ பசிக்கு தீணி போடும் வகையில் வெளியாகியுள்ளது போட்டோக்கள்.

மேலும் படிக்க | இனி ஹன்சிகாவும் மிங்கிளா? சிங்கிள்சுக்கு வந்த சோதனை...

நேற்று தளபதி விஜயின் “ரஞ்சிதமே” பாடல் வெளியானதை தொடர்ந்து, இந்த செய்தி, ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

--- பூஜா ராமகிருஷ்ணன்