“உதடு வலிக்க கொஞ்சனுமே”... அரை மணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்கள்...
தளபதி விஜய் குரலில், வாரிசு படத்தின் முதல் பாடல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷண்ஸ் தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் ஒரு மாபெரும் கமெர்சியல் படம் தான் “வாரிசு”. பல எதிர்ப்பார்ப்புகளுடன் இந்த படம் திரைக்கு வர இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | ஒருவழியா தளபதியோட வாரிசு படத்தோட ரிலீஸ் தேதி தெரிஞ்சுடுச்சு.. அப்போ ஏகேவோடது எப்பவா இருக்கும்?
தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கி இருக்கும் இந்த விஜய் 66 இல் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், பாய்ஸ் படம் மூலம், சினிமா உலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு படங்களில் தனது ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தமன் இந்த படத்தில் இணைந்துள்ளார். மிக பிரம்மாண்டமாக தில் ராஜூ, ஸ்ரீ வெங்கடேஷ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம், தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ‘துணிவு’க்கு போட்டியாக ‘வாரிசு’ வருகிறார்! இன்னும் இரண்டு பாடல்கள் தான்!
முதன் முறையாக, பலருடன் இந்த படத்தில் விஜய் இணைந்து பணி புரிந்தது குறித்து அதீத ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என அனைத்து நேர்காணல்களிலும் கூறிய ராஷ்மிகா மந்தனா, முதன் முறையாக இந்த படத்தின் மூலன் தளபதி விஜய்யுடன் நடிக்கிறார். இவர் மட்டுமல்ல, தமன், வம்சி, சரத் குமார் என இந்த படத்தில் இணையும் அனைவரும் விஜய்யுடன் இது வரை எந்த படமும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இந்நிலையில், தற்போது, “வாரிசு” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரொமோ வீட்யோ வெளீயாகி ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி வெளியான அரை மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் குவித்து தொடர் சாதனையில் சேர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க | ”மாஸாஆஆஆஆஆஆன நடனத்தை காண காத்திருங்கள்”.. ஜானி மாஸ்டரின் ட்வீட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்..!
வருகிற 2023ம் ஆண்டு பொங்கலில் அஜித்தின் “துணிவு” படமும், விஜயின் “வாரிசு” படமும் ஒன்றோடு ஒன்று பல ஆண்டுகள் கழித்து மோழ்தவுள்ள நிலையில், ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு அல்வா போல இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதிலும், முதல் பாடலே, விஜய்யின் குரலில் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகக் கடலில் குதித்துள்ளனர் என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பிக்கு - விளக்கமளித்த ஓட்டோ நிறுவனம்..!!