வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பிக்கு - விளக்கமளித்த ஓட்டோ நிறுவனம்..!!

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. 

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பிக்கு - விளக்கமளித்த ஓட்டோ நிறுவனம்..!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படம் தமிழ்,தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார் பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இத்திரைப்படம் குடும்ப பின்னணியாக இருக்கும் என படக்குழு தெரிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜயின் பிறந்தநாளன்று வாரிசு -ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

 

இதனை தொடர்ந்து இந்த போஸ்டரை ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வைரலானது. மேலும் இந்த சர்ச்சை குறித்து ஓட்டோ நிறுவனமானது விளக்கமளித்துள்ளது. 

அதில் தெரிவித்து இருப்பதாவது ஓட்டோவில் நாங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக்கொள்ளா மாட்டோம். மேலே இருக்கும் புகைப்படம் எந்த வகையிலும் ஓட்டோவுடன் தொடர்புடையது அல்ல.பொழுதுபோக்கிற்காக மட்டுமே மீம் கிரியேட்டர்கள் உருவாக்கி உள்ளனர். வாரிசு அணிக்கு எங்கள் மணமார்ந்த வாழ்த்துக்கள் என அதனை தெரிவித்துக் கொள்கிறோம் என்றன்