ஒருவழியா தளபதியோட வாரிசு படத்தோட ரிலீஸ் தேதி தெரிஞ்சுடுச்சு.. அப்போ ஏகேவோடது எப்பவா இருக்கும்?

பொங்கலை முன்னிட்டு விஜய்யின் 66-வது படமான வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஒருவழியா தளபதியோட வாரிசு படத்தோட ரிலீஸ் தேதி தெரிஞ்சுடுச்சு.. அப்போ ஏகேவோடது எப்பவா இருக்கும்?

விஜய்:

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும், வசூல் ஹீரோக்களின் வரிசையில் இருப்பவர் நடிகர் விஜய். வருடத்திற்கு ஒரு படம் என்ற ரீதியில் விஜய் நடித்து வருவதால், ஒவ்வொரு வருடமும் 
இவரது படம் வெளியாகும் போது, அவரது ரசிகர்கள் அதனை விழா போல கொண்டாடுவது வழக்கம். 

ஆப்படித்த பீஸ்ட்:

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும், ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய ஏமாற்றத்தை படம் ஏற்படுத்தியது. விஜய்யின் பலம் என்றால் அவரது நடனமும், ஆக்சனும், நகைச்சுவையும் தான். ஆனால் பீஸ்ட் படத்தில் இதை எதையுமே சரியான நகர்த்தலோடு சொல்லாததால், விஜய்யின் பெயரும் டேமேஜ் ஆனது. 

விஜய் 66:

பீஸ்ட் படம் மூலம் பெற்ற நெகட்டிவ் கமெண்ட்சை அடுத்த படத்தின் மூலம் அவர் சரிசெய்வார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். விஜய்யின் பிறந்தநாளன்று அவரது 66-வது படத்தின் அறிவிப்பு. தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி பைடிபள்ளி விஜய்யின் 66-வது படத்தை, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்யோடு பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா இணைந்திருக்கிறார். 

லீக்கான புகைப்படங்கள்:

விஜய்யின் பிறந்தநாளன்று படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டிருப்பதாக போஸ்டர் வெளியானது. அதில் விஜய் கோட் சூட்டில் செம ஸ்டைலிஷாக இருந்தார். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது, புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானதால் படக்குழுவினர் அதிருப்தியில் இருந்தனர். 

ஜனவரி 12-ம் தேதி வெளியீடு:

அஜித்தின் துணிவு படத்தோடு விஜய்யின் வாரிசு படமும் நேருக்கு நேர் மோத வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.