மன்னிப்பு கேட்ட சமந்தா... ஆதரவு சொன்ன நெட்டிசன்கள்...

விஜய் தேவர்கொண்டா ரசிகர்களிடம் நடிகை சமந்தா மன்னிப்பு கேட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மன்னிப்பு கேட்ட சமந்தா... ஆதரவு சொன்ன நெட்டிசன்கள்...

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது வெளியாக தயாராகியுள்ள படம் தான் ஷாகுந்தலம். காளிதாஸ் எழுதிய புராண கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மேலும், வருண் தாவன் நடிக்கும் ‘சிட்டாடெல்’ என்ற வெப்சீரியசில் நடிக்கிறார். இரண்டு வாரங்கள் தொடரும் இந்த சீரியசின் ஒரு பகுதியான சமந்தாவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பரியேறும் பெருமாள் தந்தை காலமானார்...

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் நடித்து வந்த தெலுங்கு படமான குஷி படத்தின் படப்பிடிப்பின் பாதியில் அவருக்கு நோய் இருப்பது தெரியவந்ததால், அதனை பாதியிலேயே விடும் நிலை ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து குஷி படம் அப்படியே நிறுத்தப்பட்டது என்றும் இனி குஷி படம் மீண்டும் வராது என்றெல்லாம் பல வதந்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மை இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார் சமந்தா.

மேலும் படிக்க | ஹெலிகாப்டரில் இறங்கி வந்த இந்தியன் தாத்தா...

தனது நோய்க்கான சிகிச்சை நடைபெற்று வர, அதில் இருந்து சிறிது சிறிதாக் அமீண்டு வருவதாகக் கூறப்படும் நிலயில்ம், சமந்தா படபிடிப்பிகளில் மீண்டும் இணைவதாக தெரிவித்தார். மேலும், சிடாடெல் என்ற இணைய தொடருடன் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது விஜய்தேவர்கோண்டாவின் ரசிகர்களுக்கு மன்னிப்பு தெரிவித்து குஷி படத்தின் படபிடிப்பு தொடரும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு விஜய் தேவர்கொண்டாவும் பறந்த மனப்பான்மையுடன் அதற்கு பதிலளித்தார்.

இதற்கு ரசிகர்கள் சமந்தாவிற்கு ஆதரவு தெரிவித்தும் அவருக்கு வாழ்த்துகள் கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | பீப் சாங் பாடிய சிம்புவுக்கு ஏன் இத்தனை பெண் ரசிகைகள்...?