பரியேறும் பெருமாள் தந்தை காலமானார்...

பரியேறும் பெருமாள் தந்தை காலமானார்...

பறியேறும் பெருமாள் படத்தில் தந்தையாக நடித்திருந்த நடிகர் தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.
Published on

நெல்லை | பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான கிராமிய தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். உயிரிழந்த நெல்லை தங்கராஜ் உடலுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ்,

தேடி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைஞர் ஒரே படத்தில் அனைவரின் மனதிற்குள் சென்று அகத்தையும் ஒவ்வொருவரின் சுயத்தையும் கேள்வி கேட்ட ஒரு நபர். தங்கராஜ் அவர்களின் கனவு பயணம் மிக தாமதமாகவே தொடங்கியது... அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

என பேட்டியளித்தார். அது மட்டுமின்றி, கிடைத்த ஒரே வாய்ப்பில் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் தங்கராஜ் என்று புகழாரமும் சூட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com