காலமானார் பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத்...!

காலமானார் பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத்...!

பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான கே.விஸ்வநாத் காலமானார்.

கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார்.  இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.  பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் விஸ்வநாத்.

 தமிழில் குருதிப்புனல், முகவரி,  காக்கைச் சிறகினிலே, பகவதி, யாரடி நீ மோகினி
 அன்பே சிவம், , சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரையை பதித்துள்ளார்.

திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்   எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருது பெற்றுள்ளார்.

 தமிழில் கடைசியாக , 'சொல்லி விடவா' என்கிற படத்திலும் நடித்திருந்தார்.  மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்டுவந்த இவர்,  நள்ளிரவு தனது 93 வயதில்  ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க எழும்பூர் ரயில்வே காவல் துறை...!