பீப் சாங் பாடிய சிம்புவுக்கு ஏன் இத்தனை பெண் ரசிகைகள்...?

இன்று பிறந்தநாள் காணும் சிம்புவிற்கு ஏன் இத்தனை பெண் ரசிகைகள் என காணலாமா?

பீப் சாங் பாடிய சிம்புவுக்கு ஏன் இத்தனை பெண் ரசிகைகள்...?

ஒரு ஆண் நடிகருக்கு ஆண் ரசிகர்கள் இருப்பது ஒரு சாதாரணமான விஷயமாக இருக்கலாம். அவரது ஸ்டைல், நடிப்பு, பஞ்ச் வசனங்கள் என அனைத்துமே அனைத்து இளைஞர்களையும் ஈர்க்கும் வகையிலேயே இருக்கும் என்பதால், அவர்களைக் கடவுள் போலவே ஆண் ரசிகர்கள் கும்பிடுவார்கள்.

அதே போல அழகான இளைஞருக்கு பெண் ரசிகைகள் அவரது படத்தின் கதாபாத்திரத்திற்காக உருவாகி அவ்வப்போது மறைவது தான் வழக்கம். அதுவே அந்த நடிகர் பெண்களுக்கு எதிராக பேசினாலோ, தனது படத்தில் ஏதாவது ஒரு வசனத்தில் தவறாக பெண்களை சித்தரித்தாலோ அந்த நடிகர் மீதான அன்பு அனைத்தும் வெறுப்பாக மாறி அவரை எதிர்க்கவே தொடங்கி விடுவார்கள்.

மேலும் படிக்க | இந்தி இல்லாமல் வாழ முடியுமா...? பிரபல இயக்குனர் கேள்வி...!

ஆனால், பெண்களை மிகவும் தவறாக சித்தரிக்கும் ஒரு பாடலையே உருவாக்கிய பிறகும், அவரது பெண்கள் ரசிகர் கூட்டம் சிறிது கூட குறையாத ஒரே ஸ்டார், முன்னாள் லிட்டில் சூப்பர் ஸ்டாரான ஆத்மன் சிலம்பரசன். மனதளவில் கோவிலே கட்டி கும்பிடும் இந்த ஆத்மன் சிம்புவுக்கு உண்மையான ரசிகர்களும், இவ்வளவு விசுவாசமான பெண் ரசிகைகளும் உருவாக என்ன காரணம் தெரியுமா?

அவரது உண்மை தன்மை தான்!

மேலும் படிக்க | சிம்புவின் திருமணம் எப்போ? டி.ராஜேந்தரின் பதில் என்ன?

தனது மனதிற்கு தோன்றிய அனைத்தையும் அப்படியே ஒளிவு மறைவு ஏதுமின்றி கூறும் ஒரே நடிகர், அன்றும் இன்றும் என்றும் சிம்பு மட்டுமே! பெரிய நடிகர், இயக்குனர்களுக்கு பயந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் என்ன கூறினாலும் அமைதியாக நடித்து விட்டு செல்வதை விட்டு, தனது அனைத்து கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தும் ஒரு நடிகர் யார் என்றால், அது நடிகர் சிம்பு தான்.

சிறு வயதிலேயே இயக்குனராகி, தனது பன்முகத் தன்மையால் உலக அளவில் பிரசித்தியான ‘ஏகான்’ என்ற பிரபல இசைக் கலைஞருடன் இணைந்து ‘லவ் ஆந்தம்’ என்ற பாடலை வெளியிட்டு, உலகில் உள்ள பல மொழிகளில் ‘காதல்’ என்ற வார்த்தை வைத்து உருவாக்கி உலகத்திற்கு அன்பின் முக்கியத்துவத்தை புகட்டினார்.

மேலும் படிக்க | ‘பத்து தல’ பாம்பா, மார்ச் 30 வரப் போகிறார் ‘ஆத்மன்’ சிலம்பரசன்...

அவரது சொந்த காதல் வாழ்க்கை பல கரடு முரடான பாதைகளாக, முட்பாதையாக அமைந்திருந்தாலும், அவரது அன்பை என்றும் ஏசாத தனது ரசிகர்களுக்காக அனைத்து வீழ்ச்சிகளையும் கடந்து, மீண்டும் எழுந்து சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த சிம்புவின் படங்களில், பெண்களை போற்றும் விதம் வித்தியாசமாக இருக்கும்.

ஏன் என்றால், அதில் எதார்த்த தன்மை இருக்கும்!

ஒரு பெண் என்றால், அவளை தேவதையாக பாவித்து அவளுக்காக உயிரையும் கொடுக்கும் மற்ற நடிகர்களின் கதைகளுக்கு மத்தியில், எதார்த்தமாக காதலை வெளிப்படுத்தி பெண்களும் சக மனிதர்கள் என் காட்சிப்படுத்தி, அவர்கள் மீது காதல் கொள்ளும் அனுபவங்களையும் முடிந்த அளவு உண்மை தன்மையுடன் வெளிப்படுத்துவார்.

மேலும் படிக்க | தீ... தளப‘தீ’... வெளியானது இரண்டாவது சிங்கிள்... பொங்கலுக்கு ஒரு பலே தீபாவளி காத்திருக்கு...

அது மட்டுமின்றி, தனது பெண் தோழி, தங்கை, காதலி என அனைவருக்கும் ஏற்றது போல தனி தனி சிறப்பிடம் தனது மனதில் கொடுத்திருந்தாலும், அனைவரிடத்தும் உண்மையான பாசம் வைத்த கதாபாத்திரமாகவே நடித்திருப்பார், சிம்பு. மேலும், காதலில் காமம் எவ்வளவு பெரிது எனவும் உண்மைத் தன்மையைக் காட்டி, இளைஞிகளின் மனதை கவர்ந்திருப்பார்.

இவ்வளவு ஏன், பெண்களை தவறாக கூறுவதாக சொல்லப்படும் ‘பீப் சாங்க்’கில் கூட, பொண்ணுங்கள திட்டாத மாமா.. உன்ன நீயே திட்டிக்க மாமா... என்று தான் பாடியிருப்பார். இது உண்மையான சிம்பு ரசிகைகளுக்கு நன்றாக தெரியும்.

மேலும் படிக்க | சித் ஸ்ரீராமுக்கு சிம்பு எவ்வளவோ பரவாயில்ல... துள்ளி குதிக்கும் டாலிவுட் ரசிகர்கள்...

சிம்புவின் அழகு, திறன் தாண்டி, அவரது வெள்ளை உள்ளம் தான் உண்மையில், 3 தசாப்தங்களாக பெண்களை மட்டுமல்லாமல், இளைஞர்கள் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளது. அத்தகைய சிம்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சிம்புவின் பாடலுக்கு வாய் அசைக்க போகும் நடிகர் விஜய்??