சித் ஸ்ரீராமுக்கு சிம்பு எவ்வளவோ பரவாயில்ல... துள்ளி குதிக்கும் டாலிவுட் ரசிகர்கள்...

சிலம்பரசன் தற்போது தனது குரலை தெலுங்கு திரையுலகிற்கு கொடுக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்திற்கு பாடகராகிறார்.

சித் ஸ்ரீராமுக்கு சிம்பு எவ்வளவோ பரவாயில்ல... துள்ளி குதிக்கும் டாலிவுட் ரசிகர்கள்...

கடந்த சில ஆண்டுகளாக, சித் ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும், தனது குரல் வளத்தால் பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார். ஒரு கட்டத்தில் எந்த படத்தின் பாடல்களை கேட்டாலும் அது சித்தின் குரல் கொண்டே இருந்தது. அதனால், ஒரு சில ரசிகர்களுக்கு சித்தின் குரல் மட்டுமே கேட்டதால், சிறிது பழகிப் போய், புளித்தும் போனது என்று சொல்லலாம்.

இந்நிலையில், பல அண்டுகளுக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் பாடகராக முழுமையாக களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். கோலிவுட்டில் மிகவும் சிறப்பான ஒரு இடத்தைப் பிடித்த சிம்பு, தமிழைத் தாண்டி தற்போது டாலிவுட் அதாவது தெலுங்கிலும் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வருகின்றனர்.

மேலும் படிக்க | மீண்டும் ஜெய் பீம்!!! ஜெயிச்சிட்டோம் மாறா...விரைவில்...

அதும் நடிப்பின் மூலமல்ல, பாடல்களின் மூலமாக...!

இவரது குரலுக்கு தற்போது பல ரசிகர்கள் உருவாகி வரும் நிலையில், 18 பேஜஸ் என்ற படத்தின் மூலம் மேலும் பல ரசிகர்கள் அவருக்கு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் வீடியோவை ரசிகர்கள் பல வகையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு ரசிகர், “அப்பாடா, புளித்து போன சித் ஸ்ரீராம் குரலைக் கேட்டு கேட்டு போன நிலையில், தற்போது சிம்புவின் குரல் சூப்பராக இருக்கிறது” என்றும், “சித் ஸ்ரீராமை விட இவரது தெலுகு உச்சரிப்பு மிகவும் சூப்பராக இருக்கிறது” என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால், சிம்புக் காட்டில் மழை தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், தற்போது விஜய்க்கும் இவர் குரல் தான் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தி காஷ்மீர் ஃபைல்ஸை கிழித்தெறிந்த நடாவ் லாபிட்.. சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த அவமானகர நிகழ்வு..!