தீ... தளப‘தீ’... வெளியானது இரண்டாவது சிங்கிள்... பொங்கலுக்கு ஒரு பலே தீபாவளி காத்திருக்கு...

அஜித் ரசிகரான சிம்புவை விஜய்க்காக பாடியுள்ள நிலையில், அந்த பாடல் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தீ... தளப‘தீ’... வெளியானது இரண்டாவது சிங்கிள்... பொங்கலுக்கு ஒரு பலே தீபாவளி காத்திருக்கு...

“வாரிசு” படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. ஏன் என்றால், இந்த பாடல் சிம்பு பாடியதாகும்.

நடிகர் விஜய் 30 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அவர் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தின்  இரண்டாவது பாடல்  மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் தீ தளபதி என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சிம்பு இந்த பாடலை பாடி அசத்தி இருக்கிறார்.

மேலும், வெளியான சிறிது நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றதோடு, தீ தளபதி என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பொங்கல் படு பயங்கரமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு அமையப்போகிறது என்பது இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | துணிவா? வாரிசா? பரபரப்பின் உச்சத்தில் ரசிகர்கள்