‘பத்து தல’ பாம்பா, மார்ச் 30 வரப் போகிறார் ‘ஆத்மன்’ சிலம்பரசன்...

'பத்து தல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘பத்து தல’ பாம்பா, மார்ச் 30 வரப் போகிறார் ‘ஆத்மன்’ சிலம்பரசன்...

பல வகையான தடங்கல்கள் கடந்து, பல வித எதிர்புகளைக் கடந்து 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென ஒரு தனி ரசிகர் மூலம் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கும் சிலம்பரசன், இந்த ஆண்டின் மூலம், தனக்கென ஒரு மிகப்பெரிய ரீ’எண்ட்ரி பெற்று, தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, ஏன் பாலிவுட் வரை சென்று விட்டார். அதுவும் சாதாரண நடிகராக மட்டுமல்ல, ஒரு அழகான குரல் கொண்ட பாடகராகவே உருவெடுத்து பல கோடி ரசிகர்களைப் பெற்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.

ஈஸ்வரன் என்ற படம் மூலம், ஹெல்தியாக இருந்த சிலம்பரசன், சிறிது வர்க்கவுட் செய்து மீண்டும் தனது இளமையான தோற்றத்திற்கு மீண்டும் வந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஈஸ்வரன் மட்டுமின்றி, மாநாடு, மஹா, வெந்து தணிந்தது காடு என்ற படங்கள் மூலம், தன்னை வெறுப்பவர்களை கூட ரசிகராக்கி திரையுலக நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

மேலும் படிக்க | உயிர், பணம், அதிகாரத்துக்கு இடையிலான போராட்டம்... வெளியாகிறது ‘ஆர் யா பார்’ வெப்சீரியஸ்...

இந்நிலையில், அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் “பத்து தல” படம். சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பத்து தல படத்தில், ஒரு தாதாவாக ஆத்மன் சிலம்பரசன் நடித்துள்ளார். 2017ம் ஆண்டு வெளியாகிய கன்ண்ட படமான ‘மஃப்தி’ படத்தின் தம்ழி ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இந்த படம் திரையரங்குகளில் 2023ம் ஆண்டு வெளியாக இருக்கிறது என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. ஏ.ஜி. ஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்புவின் ஒரு சில காட்சிகளை படக்குழு முன்பு வெளியிட்டிருந்த நிலையில், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

மேலும் படிக்க | பிரபு சாலமனுடன் வாக்குவாதம்.. எடுத்ததோ செம்பி... வந்ததோ சங்கி..

இந்நிலையில், பத்து தல படம் வருகிற 2023ம் ஆண்டு, மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டிற்கான ஒரு பரிசாக படக்குழு வெளியிட்ட இந்த செய்தியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்