அப்போ இவர்கள் பிரியலையா? குதூகலத்தில் ரசிகர்கள்....

தனுஷ் மற்றும் ஐஸ்வரியா ரஜினிகாந்த், 9 மாதங்களுக்கு பிறகு தங்களது விவாகரத்தை ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அப்போ இவர்கள் பிரியலையா? குதூகலத்தில் ரசிகர்கள்....
Published on
Updated on
2 min read

சர்ச்சைகளுக்குக் குறைவே இல்லாமல் இருக்கும் ஒரு தென்னிந்திய நடிகர் என்றால் அது தனுஷ் என்று தான் கூற வேண்டும். அடுத்த வீட்டு பையன் என்ற பெயர் பெற்று பல இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டுள்ள தனுஷ், தான் நடித்த அனைத்து படங்களையும் ஹிட்டாகவே கொடுத்திருக்கிறார்.

தைரியமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிப் படமாகக் கொடுத்து வரும் தனுஷ், தற்போது திருச்சிற்றம்பலம் என்ற ஹிட் படம் கொடுத்ததோடு, நானே வருவேன் என்ற வித்தியாசமான படத்திலும் நடித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார். தனது எளிமையான வாழ்க்கை மற்றும் எதார்த்தமான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்து இழுத்த, தமிழைத் தாண்டி, இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் ஒரு பெரிய டூர் அடித்திருக்கிறார்.

திரையுலக வாழ்க்கை மாபெரும் வெற்றிக் கண்ட நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை படு மோசமாகத் தான் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சுசி லீக்ஸ், விவாகரத்து என தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கும் அவர் வாழ்க்கையைத் தூக்கிக் கொடுத்த சினிமாவே சமீப காலங்களில் காலை வாரி விட்டுக் கொண்டிருந்தது என்றே சொல்லலாம்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் காணவில்லை. வசூல் ரீதியாகவும் சரி, ரசிகர்களின் விமர்சன ரீதியாகவும் சரி, கலவையான கருத்துகளையே பெற்ற அவரது படங்கள் வெற்றிப் பெறவில்லை என்றே சொல்லலாம். இது போதாதென்று அவரது மாபெரும் ஹிட் பாடலான ரவுடி பேபி பாடலும் ஸ்ட்ரைக் விழுந்து சர்ச்சை ஆனது.

இத்தனை அபசகுனங்களுக்கு காரணம், தனுஷின் விவாகரத்து தான் என அவரது ரசிகர்கள் கூறுவதிலும் ஒரு நியாயம் இருக்கிரது. 2004ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வரியா ரஜினிகாந்திற்கு திருமணமானது தொடங்கி, தொடர்ந்து ஹிட் படங்களாகவே கொடுத்து வந்தார். இவ்வளவு ஏன், ஐஸ்வரியா தனது வாழ்க்கையில் நுழைந்த பிரகு தான் தனது வாழ்க்கை பிரகாசம் ஆனது என்று பல பேட்டிகலில் தனுஷே கூறி இருக்கிறார்.

இப்படி இருக்க, தனது காதல் மனைவியுடன் போனில் தொடர்பு கொண்டு விவாகரத்தையே ரத்து செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். மேலும், தங்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி இனி பிரியாது என்ற உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com