நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் வீட்டில் ரகசிய சந்திப்பு...? காரணம் என்ன?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு தங்களது பணிகளில் பிஸியாக இருந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் வீட்டில் ரகசிய சந்திப்பு...? காரணம் என்ன?

தமிழில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான தனுஷ், அந்த படத்தில் நடித்த பின் பல விமர்சனங்களை சந்தித்தாலும், தற்போது அவருடைய நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கால் பதித்து இருக்கிறார். கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் தனுஷ். இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவர் கடந்த 2004 ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம், இரு வீட்டாரின் சம்மதத்தோடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார் தனுஷ்.

இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இப்படி இருக்க கடந்த ஜனவரி மாதம், இருவரும் பிரிவதாக ஒன்றாக அறிவிப்பு வெளியிட்டனர். அதாவது இவர்களது 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியானதும் இது தான் காரணம் என பல வதந்திகள் இணையத்தில் பரவியது.  வழக்கமாக கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை தான், ஆனால் இது விவாகரத்து அல்ல, அவர்கள் இணைந்து வாழ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறி இருந்தார். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிய மாட்டார்கள், தங்கள் பிள்ளைகளுக்காக இணைந்து வாழ்வார்கள் என்ற தகவலும் வெளியாகிய நிலையில் பிரிந்து தான் வாழ்கின்றனர். 

அதன் பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து ரஜினிகாந்த் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தபோதும் தனுஷ் அதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு, ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை எனவும் சொல்லப்பட்டது. அதன் பின்னர், ஐஸ்வரியாவின் பயணி ஆல்பம், வெளியான போது தனுஷ், ஐஸ்வரியாவை தோழி என்று கூறி வாழ்த்து தெரிவித்தது ஐஸ்வர்யா மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கடுப்பாக்கியது. இதையடுத்து ஐஸ்வர்யா, தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை நீக்கி விட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி கொண்டார். 

இந்நிலையில், தற்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விவாகரத்துக்கு முன்னர் இருவரும் RA  புரத்தில் உள்ள பிளாட்டில் வசித்து வந்துள்ளனர். அந்த வீட்டிற்கு தான் தற்போது இருவரும் சென்று வருவதாக சொல்லப்படுகிறது. அவர்களது வீட்டு வாசலில் உள்ள name போர்டு கூட அப்படியே தான் உள்ளதாக சொல்லப்படுகிறது. விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி வரும் நிலையில், குழந்தைகளுக்காக இருவரும் தங்கள் முடிவை மாற்றி இருக்கலாம் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அப்படியே இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.