மகனின் விளையாட்டிற்காக ஒன்று சேர்ந்த நட்சத்திர தம்பதி.. மீண்டும் இணைவார்களா?

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான குடும்பப் புகைப்படத்தை பார்த்து நெகிழும் ரசிகர்கள்..!

மகனின் விளையாட்டிற்காக ஒன்று சேர்ந்த நட்சத்திர தம்பதி.. மீண்டும் இணைவார்களா?

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷ், தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தனுஷ் & ஐஸ்வர்யா: நடிகர் தனுஷூம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரின் காதல் வீட்டிற்கு தெரியவர, முதலில் சூப்பர் ஸ்டார் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பிறகு மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் அவரை சமாதானப்படுத்தி பிறகு ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் அப்போது கூறப்பட்டது. 

இரண்டு மகன்கள்: திருமணத்திற்கு பிறகு தனுஷின் சினிமா பயணம் எதிர்பார்க்க முடியாத அளவு வளர்ச்சியடைந்தது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 

பிரிவு அறிவிப்பு: கிட்டத்தட்ட 18 ஆண்டு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையே சற்று இடைவெளி வேண்டும் எனவும், ஆகையால் இருவரும் பிரிய இருப்பதாகவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி. 

குடும்ப பிரச்னை: இந்த முடிவு ஒரு குடும்பப் பிரச்னை தான். இதனை சரி செய்ய குடும்பத்தினர் முயற்சி செய்து வருகிறோம். விரைவில் இந்த பிரச்னை முடிவுக்கு வரும் என தனுஷின் தந்தையும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா அப்போது கூறியிருந்தார். 

இருவரின் தனித் தனி பாதை: அதன் பிறகு இருவரும் தனித்தனியே தங்களது வேலைகளில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடிப்பில் பிசியாக வலம் வந்தார் தனுஷ். அதேபோல ஐஸ்வர்யாவும் தனது ஆல்பம் பாடல் வெளியீட்டில் பிசியானார். 

இருவரையும் மறவாத இரு குடும்பத்தினர்: இவர்கள் இருவர் மட்டும் தான் பிரிவை அறிவித்தனரே தவிர்த்து, இரு குடும்பத்தினரும் இவர்கள் இருவரிடமும் எவ்வித பாகுபாடும் காட்டவில்லை. உதாரணத்திற்கு ஐஸ்வர்யா கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதியாகி இருந்த போது கூட, தனுஷ் குடும்பத்தில் இருந்து அவருக்கு சமூக வலைதளம் மூலம் மெசேஜ்கள் பறந்தன. 

இதையும் படிங்க: செஞ்சுருவேன் சொல்றது மாஸ் இல்ல..!

மகன்களுடன் தனித் தனியே புகைப்படம்: அதேபோல இவர்களது மகன்கள் இருவரையும் இரண்டு பேரும் தனித் தனியே பேணி காத்து வருகின்றனர். தனுஷ் தனது பட ப்ரோமோஷன்களில் மகன்களுடன் கலந்து கொண்டார். அதேபோல ஐஸ்வர்யாவும் அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். 

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பப் புகைப்படம்: இந்த நிலையில், கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் இவர்களது மகன்கள் ஒருசேர இருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மகனின் விளையாட்டிற்காக ஒன்று சேர்ந்த தம்பதி: இவர்களது மூத்த மகனான யாத்ராவின் பள்ளியில் விளையாட்டு பிரிவின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக இருவரும் யாத்ராவின் பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மீண்டும் இணைவார்களா? ஏற்கனவே மகன்களுக்காகவாவது இருவரும் இணைய வேண்டும் என அவரது ரசிகர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வந்த நிலையில், விரைவில் அது நிறைவேற வேண்டும் என்ற ஆசையிலும் உள்ளனர். இருவரும் மீண்டும் இணைவார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.