இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு இரவில் விசிட் அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம் இயக்குநர் செல்வராகவன் நெகிழ்ச்சி பதிவு..!

இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு இரவில் விசிட் அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் நம் வீட்டிற்கு வந்தால்?

முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்றால் அதற்காக அவரது நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். 
சாமானிய மக்கள் என்றாலும் சரி, நட்சத்திரங்கள் என்றாலும் சரி. ஒருவேளை நாம் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருக்கும் போது, அந்த முதலமைச்சரே நமது வீட்டிற்கு வந்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் நடந்திருக்கிறது. 

செல்வராகவன்:

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களை இயக்கி, மக்கள் மத்தியில் நிலைக்க முடியாமல் போன எத்தனையோ இயக்குநர்கள் உள்ளனர். அதே நேரம் எடுத்தது ஒரு சில படங்கள் என்றாலும், மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்த இயக்குநர்கள் பலர் உண்டு. அதில் ஒருவர் செல்வராகவன். ஒரு மனிதனின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டும் வித்தைக்காரர். சில சமயங்களில் இவரது திரைப்படம் உடனே மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். 

சாதாரண மனிதனின் வாழ்க்கை:

ஆனால் இவரது படைப்புகள் சினிமா வரலாற்றில் முத்திரை பதித்திருக்கும் எனலாம். துள்ளுவதோ இளமை, காதல் 
கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை என ஒவ்வொரு படத்திலும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் விதமாக கதையம்சம் அமைக்கப்பட்டிருக்கும். 

நானே வருவேன்:

2019-ம் ஆண்டுக்கு பிறகு அவர் இயக்கி தனுஷ் நடிப்பில் வரும் 29-ம் தேதி நானே வருவேன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இயக்கத்திற்கு சிறிது ப்ரேக் எடுத்துக் கொண்டு தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிப்பதை தொடங்கினார் செல்வராகவன். 

நடிப்பிலும் முக்கியத்துவம்:

பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசூரன், நானே வருவேன் என நடிப்பிலும் அசரடித்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவன். இவரிடம் இருந்து அடுத்த படைப்பாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருப்பது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம். 

செல்வராகவன் வீட்டில் முதலமைச்சர்:

இப்படிப்பட்ட சூழலில் நேற்று இரவு நேரத்தில் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வராகவனின் இல்லத்திற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அப்போது முதலமைச்சருடன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். 

முதலமைச்சரை புகழ்ந்திருந்த செல்வராகவன்:

"முதலமைச்சர் எங்கள் வீட்டிற்கு வந்தது ஒரு சிறப்பான தருணம்" எனக் கேப்ஷன் கொடுத்து அந்தப் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் செல்வராகவன். சில தினங்களுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட செல்வராகவன், "சிறுவயதிலிருந்தே மு.க.ஸ்டாலினை மிகவும் பிடிக்கும் எனவும், நமது தமிழ்நாடு உலகில் ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சரால் தான் முடியும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.