"இந்தியாவில் 6 கோடி பேர் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர்"- அரவிந்தன்

கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இந்தியாவில் 6 கோடி பேர் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாக போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் பேசினார்.

"இந்தியாவில் 6 கோடி பேர் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர்"- அரவிந்தன்

தென்காசி | செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தகல்லூரியின் 34 மற்றும் 35 வது பிரிவு மாணவர்களுக்கான டிப்ளமோ பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது .

மேலும் படிக்க | நில உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி தராமல் தொடர்ந்து வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது - நீதிமன்றம் பளீச்

விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர் முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் கல்யாணி புதிய பாஸ்கர் வரவேற்று பேசினார்.

விழாவில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ்செயல்பட்டு வரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன் ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 650 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றி பேசியதாவது:-

மேலும் படிக்க | முன்விரோத சண்டைக்கு மத்தியில் பிடிபட்ட ஆயுதங்கள்...

சாதி சங்கங்கங்கள் இங்குள்ள மாணவர்களை மூளைச்சலவை செய்து சீரழித்து வருகிறது. மாணவர்களுக்கு அனைத்து தேவைகளும் எளிதில் கிடைப்பதால் தோல்விகளை சந்திக்க கூடிய பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள்.

மேலும் இந்திய இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடுஇந்தியாவில் சுமார் 6 கோடி பேர் போதைக்கு அடிமையாகி உள்ளதாக பேசினார். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எல்லையில் போர் தேவையில்லை.

மேலும் படிக்க | புகைப்படக் கலைஞர்களின் கண்காட்சி இன்றுடன் நிறைவு...

வேண்டுமென்றால், நாட்டில் உள்ள இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கினால் போதும். அந்த நாட்டையே காலி செய்து விடலாம். இது மாதிரியான செயல்தான் நம் நாட்டில் நடக்கிறதுபாகிஸ்தான்,  ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இதை செய்து கொண்டிக்கிறது.

இதில் இருந்து தற்காத்து கொள்வது காவல் துறையின் வேலை மட்டுமல்ல. போதையினால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.  விழாவில் கல்லூரி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | நிம்மதியா மொட்டை கூட அடிக்க முடியலை- மொட்டையடிக்க அதிக கட்டணம் கேட்டதால் பக்தர்கள் தர்ணா...