நிம்மதியா மொட்டை கூட அடிக்க முடியலை- மொட்டையடிக்க அதிக கட்டணம் கேட்டதால் பக்தர்கள் தர்ணா...

நிம்மதியா மொட்டை கூட அடிக்க முடியலை- மொட்டையடிக்க அதிக கட்டணம் கேட்டதால் பக்தர்கள் தர்ணா...

பழனி இடும்பன் கோவிலில் மொட்டை அடிக்க அதிக பணம் கேட்பதாகக் கூறி பக்தர்கள் தர்ணா போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர்.
Published on

திண்டுக்கல் | பழனியில் உள்ள இடும்பன் கோவில், முடிகாணிக்கை செலுத்துவதற்கான இடமாக இருகிறது.

பழனி இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் இன்று காலை மொட்டை அடிக்க வரும் பக்தளிடம் கட்டாயமாக 100 முதல் 200 வரை கேட்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

அதனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் மொட்டையடிக்கும் இடம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தை ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பக்தர்கள் இன்று காலை மொட்டை அடிக்க வரும் பொழுது அதிகாலை ஐந்து மணி முதல் 9 மணி வரை கூடுதல் கட்டணம் கொடுத்தால் தான் மொட்டை அடிப்போம் என ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாங்கள் மனௌளைச்சலுக்கு ஆளானதாகவும், பழனி கோவில் வரை சென்று மொட்டை அடித்ததாகவும் கூறி பக்தர்கள் கேள்விகள் எழுப்பினர்.

மேலும், தமிழ்நாடு அரசு மொட்டை அடிக்க அனைத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நிர்வாக சார்பில் மொட்டை அடிக்கும் இடங்களில் இலவசம் என அறிவித்திருந்த நிலையில் இடுமன்குளம் நிர்வாகத்தில் மட்டும் மொட்டை இலவசம் என பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பதும் மொட்டை அடிக்க 100 முதல் 200 வரை கட்டாயமாக வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் 27 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஊழியர்கள் மது போதையிலும் போதை வஸ்துகளை பயன்படுத்தியும் மொட்டை அடிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், சுமார் 15 நாட்கள் முதல் விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வரும் தங்களுக்கு இது போன்ற சம்பவங்களால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகும் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com