பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற கரும்பு விவசாயிகள்...குண்டுகட்டாக தூக்கிய போலீசார்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற கரும்பு விவசாயிகள்...குண்டுகட்டாக தூக்கிய போலீசார்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கரும்பு விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

கரும்பு விலையை டன்னுக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்க கோரியும், தஞ்சாவூரை சேர்ந்த தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் மீது கடன் பெற்றுள்ளதாகவும், இந்த கடனை ஆலையின் பெயருக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிக்க : கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி... மெக்கானிக் ஷாப்பிற்குள் நுழைந்து கவிழ்ந்தது...!

மதுரை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தியபடி, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.