முன்விரோத சண்டைக்கு மத்தியில் பிடிபட்ட ஆயுதங்கள்...

முன்விரோதம் காரணமாக நடைபெற்ற மோதல் குறித்த விசாரனையின் போது பட்டாகத்தி, நாட்டுதுப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது.
முன்விரோத சண்டைக்கு மத்தியில் பிடிபட்ட ஆயுதங்கள்...
Published on
Updated on
1 min read

கடலூர் | நெய்வேலி வட்டம் 21-ல் லட்சுமணன் என்பவரின் மகன் மணிகண்டன் வசித்து வருகிறார்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகவேல் மகன் கொசு என்ற கணேஷ் குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வட்டம் 21 ல் உள்ள மதுபான கடை முன்பு, கொசு என்ற கணேஷ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கொசு என்ற கணேஷ் குமாரின் கூட்டாளிகளான, அசோக், அரவிந்தன், சுந்தரச் செல்வன் ஆகிய மூவரும் சேர்ந்து, மணிகன்டனை, கொடூரமாக தாக்கி உள்ளனர்.இதுகுறித்து மணிகண்டன் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நெய்வேலி காவல்துறையினர், மணிகண்டனை தாக்கிய நால்வர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கொசு என்ற கணேஷ் குமார் வீட்டில் சோதனை மேற்கொள்ளும் போது, கத்தி மற்றும் நாட்டுத் துப்பாக்கி இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அதனை பறிமுதல் செய்து, கொசு என்ற கணேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் என மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கொசு என்ற கணேஷ்குமாரின் கூட்டாளியான, வட்டம் 21-ல் வசிக்கும்,  காக்கா என்ற அசோக் என்பவர் பட்டா கத்தியை, கூர்த்திட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com