ஏர் ஹார்ன் இருக்கா? அப்போ ஃபைன் கட்டுங்க.. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்...

தடை செய்யப்பட்ட ஹேர் ஹாரன் பொறுத்தி இயக்கப்பட்டு வந்த மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து அதிரடி முடிவெடுத்துள்ளனர்.

ஏர் ஹார்ன் இருக்கா? அப்போ ஃபைன் கட்டுங்க.. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்...

உதகை நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் மினி பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்தில் செல்வதுமாக இருக்கிறது.

மேலும், நடைபாதையில் செல்வோர்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதும், தடை செய்யப்பட்ட ஹேர் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களை பயன்படுத்துவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வின்சென்ட் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் படிக்க | மேய்ந்து கொண்டிருந்த 400 வாத்துகள் உயிரிழப்பு...

சோதனையில் தடை செய்யப்பட்ட ஹோர் ஹாரன்களை பயன்படுத்தி வந்த ஐந்து மினி பேருந்துகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், ஹேர் ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் காய்கறிகளை ஏற்றி வரும் சரக்கு லாரிகளில் தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு லாரி ஓட்டுனர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

உதகை நகரில் தடை செய்யப்பட்ட ஹேர் ஹாரன்களையோ, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | போன் எண்ணை பகிர்வதற்கு முன் யோசியுங்கள்... நீங்களும் சிக்கலாம் என்ஐஏ விசாரணையில்!!