ரூ.3 கோடி மதிப்பிலான போதை பவுடர் பறிமுதல்...

கினியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.3 கோடி மதிப்பிலான போதை பவுடர் பறிமுதல்...

சென்னை | பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். 

அப்போது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியாவில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். 

மேலும் படிக்க | ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டியவர் கைது...

அப்போது கினியா நாட்டை சேர்ந்த 30 வயது வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். 

அப்போது சூட்க்கேஸ் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக எடையுடன் இருந்தது. உடனே அந்த சூட்கேசை பிரித்து சோதனை செய்த போது அடி பாகத்தில் ரகசிய அறை வைத்து அதில் விலையுர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். 

மேலும் படிக்க | பயணிகளிடம் பேரம் பேசிய காவல்துறையினர்..... நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

ரூ. 3 கோடி  மதிப்புள்ள 1 கிலோ 539  கிராம் அம்பெட்டமின் என்ற போதை பவுடரை  பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி கினியா நாட்டு வாலிபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார். 

இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என  சுங்கத்துறை அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | போன் எண்ணை பகிர்வதற்கு முன் யோசியுங்கள்... நீங்களும் சிக்கலாம் என்ஐஏ விசாரணையில்!!