
சென்னை | கடந்த 10ம் தேதி தொடங்கப்பட்ட இக்கண்காட்சியில் இயற்கை சீற்றங்கள், தமிழ்நாடு அரசியல் செய்திகள், செய்தி சேகரிப்பின்போது முக்கிய சம்பங்கள் உள்ளிட்ட 260 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்றுடன் இந்த புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத் தலைவர் ஏ. கே. விஸ்வநாதன், கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும் படிக்க | முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் பணம் அனுப்பிய யாசகர்...
ராதாகிருஷ்ணன், வரலாறு மட்டுமல்லாமல் தற்போதைய முக்கிய நிகழ்வுகளையும் இக்கண்காட்சி நினைவு கூர்வதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், வரலாறு மட்டுமல்லாமல் முக்கியமான நிகழ்வுகள், பேரிடர், வெள்ளம், சுனாமி, தீ விபத்து, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தன்னை பிரம்மிக்க வைத்ததாகத் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் போன்ற பல புகைப்படங்கள் இருக்கும் நிலையில், பசி வறுமை போன்ற அனைத்து வகையான துன்பங்கள் வரை கஷ்டங்கள் அனைத்தையும் தனது முழு ஈடுபாட்டுடன் வெளிப்படுத்தக்கூடிய ஒன்று தான் புகைப்படக்கலை என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படக் கலைஞர்களின் திறமை வியக்கவைப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | குடியரசு தலைவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு...