முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் பணம் அனுப்பிய யாசகர்...

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதைக் கேட்டு தொடர்ந்து பொது சேவைக்காக பணம் அனுப்பி வருவதாக தெரிவித்தார்.
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் பணம் அனுப்பிய யாசகர்...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி | சாத்தான்குளம் ஆழங்கிணற்றை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 70). இவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து வருகிறார். அப்போது கிடைக்கும் பணத்தில் தன் சாப்பாட்டுக்கு போக மீதம் உள்ள பணத்தை கொண்டு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ-வை சந்தித்து யாசகம் கேட்டுள்ளார். அப்போது அவர் வழங்கிய பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குமாறு செல்லூர் ராஜு கூறியதை கேட்டு, தொடர்ந்து யாசகம் பெற்ற பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதுவரை முதல்வர் நிவாரண நிதிக்கு மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com