அர்ஜுன் சம்பத்தே காதல் திருமணம் தான் செய்தார்- லொயோலா மணி அதிரடி...

காதலர் தினத்தன்று காதலர் மீது தாக்குதல் நடத்தி சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார்.

அர்ஜுன் சம்பத்தே காதல் திருமணம் தான் செய்தார்- லொயோலா மணி அதிரடி...

தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு சமூக விரோதிகள் சிலர் காதலர்களை, தாக்குவது, காதலுக்கு எதிராக சமூகவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவுள்ளனர்.

இதனையும் படிக்க | எடப்பாடி எங்களை எப்படி புகழ முடியும்....

இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் முன்கூட்டியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் கேட்டுக்கொண்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி,

நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதல் என்பது உள்ளத்தோடு தொடர்புடையது, சாதிக்கும், மதத்திற்கும், நாட்டிற்கும், இனத்திற்கும், மொழிக்கும், பாலினத்திற்கும், அப்பாற்பட்டது. ஆனால் சில சமூக விரோதிகள் காதலை சாதிமதத்துடன் ஒப்பிட்டு, சாதி கலவரத்தையும், மதகலவரத்தையும், ஏற்பட கூடும் வகையில் காதலர் தினத்தன்று சிலர்  சமூக செயலில் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.

என கூறினார்.

இதனையும் படிக்க | சாபத்தை பொய்யாக்கிய கிராம மக்கள்.....

மேலும், கட்டாயத் திருமணம் செய்து வைப்பது, பொது இடத்தில் உள்ள காதலர்களை தாக்குவது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காதல் என்பதை இவர்கள் தவறாக புரிந்துள்ளதைக் கூறி, காதல் தான் மனிநேயத்தின் மாமருந்து, சமத்துவத்தின் அடையாளம் எனத் தெரிவித்தார்.

இதனையும் படிக்க | பூத்துக் குலுங்கும் கார்ஸ் புதர் செடிகள்... புல்வெளி பகுதிகளுக்கு பாதிப்பு...

பின், வாலண்டைன் என ஒரு பாதிரியார் பெயரில் காதலர் தினம் அதாவது வாலண்டைன்ஸ் டே கொண்டாடுவதால்,  மதத்துடன் பொருத்திபார்த்து, இது கிருத்துவ நிகழ்வு என்றாலும், இது காலாச்சாரத்திற்கு எதிரானது என சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கண்டனம் தெரிவித்தார்.

காதர்களுக்காக பேசிய லொயோலா மணி, காதல் என்பது அன்பின் வெளிப்பாடாக இருப்பதால் இந்த காதலையும், அன்பையும் பாதுகாக்க, அத்துமீறி செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என வேண்டுகோள் விடுத்து புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். பின், கழுதைக்கு திருமணம் செய்வது, வட மாநிலங்களில் காதலர்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது குறித்து வருத்தமும் தெரிவித்தார்.

இதனையும் படிக்க | இடஒதுக்கீடு கோரிக்கையும்.... வாக்கும்...!!

தமிழகத்தில் காதலர் தினத்தன்று வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயலில் ஈடுபடும் கும்பலை தடுக்க வேண்டும் என பேசிய அவர், காதலர் தினத்தை தடை செய்ய வேண்டுமென கூறிய அர்ஜூன் சம்பத்தை ஒரு ஆளாவே பார்க்கக்கூடாது என அர்ஜுன் சம்பத் குறித்தும் ஒரு சில கருத்துகளை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது,

அர்ஜூன் சம்பத்தே காதல் திருமணம் செய்து கொண்டவர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. காதலின் அதிதீவிர வெளிப்பாடே ஆன்மிகம், காதல் இருந்தால் தான் கடவுளை நேசிக்கமுடியும், அர்ஜுன் சம்பத் நேசிக்கிறார். அதனால் அவருக்கும் காதல் உண்டு

எனக்கூறினார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

இதனையும் படிக்க | மீண்டும் லேடி சூப்பர் ஸ்டாரை சீண்டிய நடிகை மாளவிகா.....