சாபத்தை பொய்யாக்கிய கிராம மக்கள்.....

சாபத்தை பொய்யாக்கிய கிராம மக்கள்.....

சிவகங்ககை அருகே 30 வருடங்களுக்கும் மேலாக இருந்த சாபத்தை கிராம மக்கள் பொய்யாக்கியுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் உருளி கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது.  இந்த கண்மாய் நிரம்பாது எனவும் மீன் வளராது எனவும் கடந்த 30 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது.  இதற்கு காரணம் அதன் மீது ஏற்பட்ட சாபமே என இதுவரை மக்கள் நம்பி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் கண்மாய் நிரம்பியதையடுத்து, உற்சாகம் அடைந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்து கண்மாய் மீது விழுந்த சாபத்தை பொய்யாக்க மீன் குஞ்சுகளை வாங்கி வளர்த்து வந்தனர். 

தற்போது, மீன் வளர்க்க தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், நன்கு வளர்ந்துள்ள மீன்களை பிடித்து, கிராம மக்களுக்கு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.  சாபத்தை பொய்யாக்கிய கிராம மக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிக்க:   பூத்துக் குலுங்கும் கார்ஸ் புதர் செடிகள்... புல்வெளி பகுதிகளுக்கு பாதிப்பு...