சொத்து தகராறில் மூதாட்டியை எரித்து கொலை செய்த மகன்...

தனது மனைவியை துன்புறுத்தியதற்காகவும் சொத்து பிரச்சனைக்காகவும், தனது வயதான தாயை தீ வைத்து எரித்திருக்கிறார் மகன். இச்சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராறில் மூதாட்டியை எரித்து கொலை செய்த மகன்...

திருநெல்வேலி : பாளையங்கோட்டை கே.டி.சி. நகரையடுத்த மங்கம்மாள் சாலை பகுதியில் வசித்து வந்தவர் அரசம்மாள். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 70 வயதான அரசம்மாள் அவரது மூத்த மகன் அண்ணாமலையுடன் வசித்து வந்தார்.

4 பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து முடிந்து தனித்தனியே வசித்து வந்த நிலையில் இவர்களுக்குள் சொத்து தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் அண்ணாமலைக்கும், அரசம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு வெடித்துள்ளது. 

மேலும் படிக்க | விபரீதத்தில் முடிந்த காதல் கதை.. கிருஷ்ணகிரி பெரும் சோகம்..!

இதன்காரணமாக, அண்ணாமலையின் மனைவி அனிதாவுக்கு தனது மாமியார் அரசம்மாள் மீது அதிகப்படியான வெறுப்பும் உண்டாகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதியன்று அரசம்மாள் தனியாக தங்கிய அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்ததையடுத்து விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது விறகுக் கட்டைகளுக்கு இடையே எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார் அரசம்மாள். தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக அனைவரையும் நம்ப வைத்திருந்தார் அண்ணாமலை. 

மேலும் படிக்க | இருவரை காதல் செய்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கொடூரம்...

ஆனால் இந்த சம்பவத்தை சந்தேகக் கண்கொண்டு பார்த்த போலீசாருக்கு பின்னர் உண்மை விளங்கியது. மூன்று பிள்ளைகளுக்கும் சொத்துக்களை வழங்கிய தாயிடம், மூத்த மகன் அண்ணாமலை, குடியிருக்கும் வீட்டையாவது தன் பெயருக்கு எழுதி வைக்க கேட்டிருக்கிறார். 

அதே நேரம் அரசம்மாள் தன்னை கொடுமைப்படுத்துவதாக அண்ணாமலையிடம் தலையணை மந்திரம் போட்டார் அனிதா. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அண்ணாமலை, பெற்ற தாய் என்றும் பாராமல் மாடியில் இருந்து தள்ளி விட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | காதலனை கொலை செய்த காதலி தற்கொலை முயற்சி...

உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருந்த அரசம்மாளை தூக்கிச் சென்று விறகு கட்டைகளுக்கு மத்தியில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி உள்ளார் அண்ணாமலை. இறந்த பின்புதான் தனக்கு மூத்த மகன் கொள்ளி வைப்பான் என்று நினைத்த அரசம்மாள், இறுதியாக உயிருடன் இருந்தபோதே தீ வைத்து எரித்ததை நினைத்து வெந்து நொந்து இறந்து போயுள்ளளார். 

பெற்றெடுத்து வளர்த்த அன்னையை சொத்துக்காக கொலை செய்த பிள்ள,  மீதி காலத்தை சிறையில் கழிப்பதற்கு தற்போது தயாராகியிருக்கிறார். 

மேலும் படிக்க | மது போதையில் மண்டையை உடைத்த ஆசாமிகளால் பதற்றம்...