காதலனை கொலை செய்த காதலி தற்கொலை முயற்சி...

கன்னியாகுமரியில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி கிரீஷ்மா காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், திடீரென கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

காதலனை கொலை செய்த காதலி தற்கொலை முயற்சி...

+காதலர்கள் பல வகையான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர் இவ்வுலகில். சாதி பிரச்சனை, பண பிரச்சனை, இனப்பிர்ச்சனை, மொழி பிரச்சனை, வயது, அது இதுவென தொடர்ந்து பல வகையான எதிர்ப்புகளை சந்தித்து வரும் காதலர்கள் கடைசி வரை போராடுவது தங்களது காதல் ஜெயிக்கத்தான்.

ஆனால், அந்த காதல் ஜெயிக்க ஒருவர் மட்டும் போராடினால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அதிலும், தன்னைக் காதலிப்பவர் தன்னையே கொலை செய்ய முயற்சித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆச்சிரியமாக இருக்கிறதா? இப்படி ஒரு நம்ப முடியாத சம்பவம் தான் தற்போது கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்க | மது போதையில் மண்டையை உடைத்த ஆசாமிகளால் பதற்றம்...

கன்னியாகுமரியில், காரக்கோணம் நெய்யூரைச் சேர்ந்தவர் கிரீஷ்மா. பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன்ராஜை காதலித்து வந்த நிலையில், கிரீஷ்மாவின் பெற்றோர் அவரை ஒரு ராணுவவீரருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். தனது காதலர் மீதான காதல் குறைந்து ராணுவ வீரருடன் திருமண பந்தத்தில் ஈடுபட மனதார தயாரான நிலையில், காதலன் ஷாரோனை அணுகியிருக்கிறார் கிரீஷ்மா.

தனது பெற்றோர் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தனக்கென ராணுவ வீரர் ஒருவரை திருமணத்திற்கு முடிவு செய்ததாகவும் கூறி, தங்களது காதலுக்கான அடையாளங்களை அழிக்குமாறு கேட்டுள்ளார் கிரீஷ்மா. அதாவது, அவர்களது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தன் கண் முன்னே அழித்து விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | ஆசை ஆசையாய் கட்டிய வீடு... அனுபவிக்க முடியாமல் கொலையான தம்பதி..

ஆனால், கிரீஷ்மாவின் காதலுக்காக அழுத ஷாரோன், அவரது காலில் விழுந்து தங்களது காதலைக் காக்கும்படியாக கெஞ்சியுள்ளார். மேலும், அவர்கள் காதல் பிரிய விருப்பமில்லாத ஷாரோன், கிரீஷ்மாவைப் பிரிய மறுப்பு தெரிவித்ததோடு, காதல் சின்னங்களை அழிக்க முடியாது என்றும், அவை தங்கள் காதல் உறவின் அடையாளங்கள், அதனால் அழிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத கிரீஷ்மா, தனது வீட்டிற்கு வந்து எப்படி இதில் இருந்து முழுமையாக தப்புவது என யோசனை செய்த நிலையில், காதலன் தன்னை விட்டு பிரிய மறுப்பதால், ஒரேடியாக அவரை கொன்று விடலாம் என முடிவெடுத்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தாரும் உடந்தை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தனது காதலனை, தான் மாட்டிக் கொள்ளாமல் எப்படியெல்லாம் கொலை செய்வது என கூகுள் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கட்டப்பஞ்சாயத்தில் கத்திக்குத்து... போலீசார் கவனக்குறைவு காரணமா?

ரப்பர் மரத்திற்கு அடிக்கும் நஞ்சை தானே கடையில் வாங்கி அதனை ஷாரோனுக்கு ஜூசுடன் கலந்து குடிக்க கொடுத்துள்ளார். காதலி தன் கையால் கொடுத்ததும், விடம் கலந்த அந்த ஜூசை வாங்கிக் குடித்து உயிரிழந்தார் ஷாரோன்.

இச்செய்தி ஊருக்குள் தீயாய் பரவி, பெண்ணின் வீடு மேல் கற்கள் தூக்கி அடித்து போராட்டம் செய்துள்ளனர். பின், போலீசார் தகவலறிந்து, கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரித்த போது, எதுவுமே நடக்காதது போல நாடகமாடியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.

மேலும் படிக்க | பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தைக்கு கை முறித்த செவிலியர்கள்...

தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான கிரீஷ்மாவை நெடுமங்காடு காவல்நிலையத்தில் அழைத்து விசாரித்த போது, தனது காதலன் ஷாரோனை நினைத்து கதறி அழுதது போல நடித்திருக்கிறார். ஆனாலும், காவலர்கள் தங்கள் பாணியில் விசாரிக்கத் துவங்கியதும், கழிவறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தற்போது விசாரணையில், தனது ஜாதகப் படி, தனது முதல் கணவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது காதலன் ஷாரோனே தனது முதல் கணவனாக இருந்த நிலையில், அவரைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | இப்படியெல்லாம் திருடுவார்களா... நூதன திருடனால் அதிர்ச்சி...

இந்நிலையில், காதலனை காதலியே விடம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. காதலியை மலைப்போல் நம்ப்ய ஷாரோன் தற்போது மறைந்தாலும் அவரது உண்மை காதல் தற்போதூ மக்கள் முன்னிலையில் பெரிதாக தெரிவிகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | விளையாட்டு வினையானது... கர்நாடகாவையே உலுக்கிய சம்பவம்..