விளையாட்டு வினையானது... கர்நாடகாவையே உலுக்கிய சம்பவம்..

பகத்சிங் நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கப்பட்டபோது கர்நாடகாவில் 13 வயது சிறுவன், தூக்கு கயிற்றில் மாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
விளையாட்டு வினையானது... கர்நாடகாவையே உலுக்கிய சம்பவம்..
Published on
Updated on
1 min read

ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதியன்று கர்நாடக மாநிலம் உதயமான நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் தனி விழாக்கள் எடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 

அந்த வகையில் கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கலை, இலக்கியப் போட்டிகள் நடைபெறுவதாய் இருந்த நிலையில் இதன் முக்கிய நிகழ்வாக பகத்சிங் வரலாற்றை நாடகமாக எடுப்பதற்கு திட்டமிடப்பட்டது. 

இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்டு ஆங்கிலேயர்களால் தூக்கில் போடப்பட்டு உயிர் துறந்த மாவீரன் பகத்சிங்-கின் வேடத்தில் நடிப்பதற்கு சஞ்சய் என்கிற 7-ம் வகுப்பு மாணவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான்.

கடந்த ஒரு மாத காலமாக நாடகத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில் சிறுவன் சஞ்சய் மனதில் நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. இதற்காக வீட்டிலும் கண்ணாடி முன் நின்று கொண்டு பகத்சிங் போல வேடம் போட்டுக் கொண்டு வசனங்களைப் பேசி வந்திருக்கிறான். 

நாடகத்திற்கு 2 நாட்களே இருந்த நிலையில் சஞ்சய், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ள மின்விசிறியில் கயிற்றைத் தூக்கிப் போட்டான். சோபாவில் ஏறிய சஞ்சய், தனது முகத்தைக் கருப்புத்துணியால் முடியவாறே தூக்குக்கயிற்றை முத்தமிட்டு ஒத்திகைப் பார்த்தான். 

அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறியதில் தூக்குக்கயிற்றில் சிறுவனின் கழுத்து இறுகியதைடுத்து சில நிமிடங்களிலேயே துடிதுடித்து உயிரிழந்தான். சிறுவனின் உடலைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது சம்பவம் காண்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com