இருவரை காதல் செய்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கொடூரம்...

ஈரோடு மாவட்டத்தில் 4 மாத கர்ப்பிணி வீட்டில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலை என கூறப்பட்ட நிலையில் திட்டமிட்ட கொலை என தற்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருவரை காதல் செய்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கொடூரம்...

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ராயப்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பனின் மகள் பிருந்தா. 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்து வந்த பிருந்தா, கார்த்திக் என்பவரை காதலித்து வந்தார். ஆனால், அவரை மட்டுமல்ல, அதனது பக்கத்து பையனான அரவிந்த் என்பவரையும் சேர்த்து ஒரே நேரத்தில் இரண்டு காதல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் என்று வரும் போது, கார்த்திக், அரவிந்த் ஆகிய இருவரில் யாரைத் திருமணம் செய்து கொள்வது என குழம்பிய போது, கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அரவிந்தை விட்டு பிரிந்து ஒன்றனரை ஆண்டிற்கு முன்பு கார்த்திக்கைக் காதல் திருமணம் செய்து கொண்டார் பிருந்தா.

மேலும் படிக்க | காதலனை கொலை செய்த காதலி தற்கொலை முயற்சி...

திருமணம் ஆன பிறகும், தனது முன்னாள் காதலனான அரவினதி விட்டுக் கொடுக்காமல் ரக்சியமாக அவ்வப்பொது அரவிந்துடன் பிருந்தா தொடர்பில் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 4 மாத கர்ப்பிணியாக இருந்த போதும், தொடர்பை விடாத ஒரு நிஅலியில், ஒரு நாள் அரவிந்தை நேரில் சந்திக்க பிருந்தா கேட்டிருக்கிறார்.

அதன்படி கடந்த அக். 27-ம் தேதியன்று, கணவர் கார்த்திக் வெளியே சென்றதை கவனித்த அரவிந்த், பிருந்தாவை சந்தித்துள்ளார். தன்னுடன் வந்துவிடுமாறு காதல் வார்த்தைகள் பேசி பிருந்தாவைஅ அழைத்த போது, தான் 4 மாத கர்ப்பிணியாக இருந்ததை சுட்டிக் காட்டி அவருடன் வர மறுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | மது போதையில் மண்டையை உடைத்த ஆசாமிகளால் பதற்றம்...

இதனால் மனம் உடைந்த அரவிந்த், ஒன்றாக சேர்ந்து வாழத்தான் முடியவில்லை. சேர்ந்து செத்து போகலாம் என தற்கொலைக்கு தூண்டியிருக்கிறார். அதற்கு தற்கொலை செய்வதற்கு பயமாக இருப்பதாகவும், தன்னைக் கொன்று விட்டு பின்னர் தற்கொலை செய்து கொள்ளுமாறும் அரவிந்திடம் கண்ணீர் மல்க கூறி விட்டு கண்ணை மூடி நின்றார் பிருந்தா.

இதையடுத்து பிருந்தாவைக் கழுத்தை நெரித்துக் கொன்ற அரவிந்த் உடனடியாக வீட்டில் இருந்து தப்பியோடினான். பிருந்தா மர்மமான முறையில் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ந்த உறவினர்கள் ஆரம்பத்தில் இது தற்கொலை என நினைத்தனர். ஆனால் பிருந்தாவின் செல்போன் எண்ணை ஆராய்ந்து பார்க்கையில், இது திட்டமிட்ட கொலை என தெரியவந்தது.

மேலும் படிக்க | ஆசை ஆசையாய் கட்டிய வீடு... அனுபவிக்க முடியாமல் கொலையான தம்பதி..

முன்னாள் காதலியை கொன்று விட்டு தப்பியோடிய அரவிந்தை போலீசார் கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். காதலனை நம்பி தற்க்லைக்கு சம்மதித்த கர்ப்பிணி பெண்ணின் அவல நிலை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | கட்டப்பஞ்சாயத்தில் கத்திக்குத்து... போலீசார் கவனக்குறைவு காரணமா?