விபரீதத்தில் முடிந்த காதல் கதை.. கிருஷ்ணகிரி பெரும் சோகம்..!

விபரீதத்தில் முடிந்த காதல் கதை.. கிருஷ்ணகிரி பெரும் சோகம்..!

சூளகிரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் காதலனுடன் விஷம் குடித்த 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துள்ளார்.

காதல் ஜோடிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த எரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்த உறவினர் பெண்ணான அனுஸ்ரீ 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

தீவிர தேடுதல்

இருவரும் காதலித்து வந்த நிலையில் இவரது காதல் விவகாரம் மாணவியின் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் இரு வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சௌந்தர்ராஜன் அனுஶ்ரீயை தனது வீட்டிற்கு கூட்டி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அனுஶ்ரீயின் பெற்றோர் கர்நாடக மாநிலம் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் பெயரில் கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

தற்கொலை முயற்சி

கடந்த 26 ஆம் தேதி காதல் ஜோடி இருவரும் எரண்டப்பள்ளி கிராமத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதை குறித்து அப்பகுதியில் பார்த்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். இந்த நிலையில் அனுஸ்ரீ  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகம் சம்பவம்

இது குறித்து சூளகிரி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காதலன் செளந்தராஜன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி காதலால் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.