காவலர்களால் சுட்டு தள்ளப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர்...
தனது வாகனத்தில் இருந்து இறங்கும் போது ஒடிசா அமைச்சரை காவலர் இரண்டு முறை தாக்கியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நப்பா கிஷோர் தாஸ், ஒரு காவலரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில், ஜர்சுகா மாவட்டம், பிரஜராஜ்நகர் அருகில் உள்ள காந்திசோக் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு குண்டுகளை அந்த காவலர் சுட்டதால் மிகவும் கொடூரமாக காயப்படுத்தப்பட்டார் அமைச்சர் நப்பா தாஸ். உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க | பெட்ரோல் பங்கில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் கொன்று தற்கொலை...
உதவி சப் இன்ஸ்பென்க்டர் கோபால் தாஸ் என்பவர், நப்பா தாஸ் ஒரு நிகழ்வுக்காக வருகை தந்த போது, அவரை தனது துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளதாக தகவல்களும், நேரில் கண்ட சாட்சியங்களும் தெரிவிக்கின்றன.
மேலும், பொது மக்கள் கையில் பிடிப்பட்ட கோபால் தாஸ் தற்போது கைதாகி, காவலர்கள் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்காள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | திடீர் தாக்குதல்....ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு......
எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என தற்போது வரை தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது. மேலும், சாட்சிகளின் கூற்று படி, துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்து கோபால் தாஸ் ஓடுவதை பொது மக்கள் கண்டதாகவு, அதனால் சந்தேகத்தின் பேரில் அவரை துரத்திப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
மாநில அமைச்சர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த போது மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் கண்டு சந்தித்த நிலையில், அவரது மகனுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஜம்மு - காஷ்மீரில் தொடரும் பதற்றநிலை...துப்பாக்கிச்சுடு நடந்த இடத்தில்...மீண்டும் நிகழ்ந்த...!
Odisha CM Naveen Patnaik consoles the son of Health Minister Naba Das who was shot at in Brajarajnagar, Jharsuguda district.
— ANI (@ANI) January 29, 2023
The state minister is under medical treatment at a private hospital in Bhubaneswar. pic.twitter.com/n5rOIpbnuj