திடீர் தாக்குதல்....ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு......

திடீர் தாக்குதல்....ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு......

அமெரிக்காவில் 6 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கலிபோர்னியா மாகாணம் கோஷன் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் நுழைந்தது.  இதனையடுத்து வீட்டுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.  அப்போது  6 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இறந்தோரின் உடலை மீட்ட போலீசார் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு....வெற்றிகளும் பரிசுகளும்....