பெட்ரோல் பங்கில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் கொன்று தற்கொலை...

பெட்ரோல் பங்கில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் கொன்று தற்கொலை...

அமெரிக்கா வாஷிங்கடனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேரைக் கொன்ற நபர், தாயிடம் கடைசியாகப் பேசிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

யகிமா நகரில் இருந்த ஒரு அங்காடிக்குள் புகுந்த ஒரு இளைஞன், 21 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பயத்தில் தாயை போனில் அழைத்த நபர், பலரைக் கொன்றுவிட்டதாகவும் தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு அவர் உயிரிழந்தார். 

மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்....இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு....