புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்....இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு....

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்....இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு....

Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், சீன புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 

லாஸ் ஏஞ்செல்ஸ் மான்டெரி பூங்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட லூனார் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது 72 வயதான ஒரு நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தொடர்ந்து காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com