ஜம்மு - காஷ்மீரில் தொடரும் பதற்றநிலை...துப்பாக்கிச்சுடு நடந்த இடத்தில்...மீண்டும் நிகழ்ந்த...!

ஜம்மு - காஷ்மீரில் தொடரும் பதற்றநிலை...துப்பாக்கிச்சுடு நடந்த இடத்தில்...மீண்டும் நிகழ்ந்த...!

ஜம்மு காஷ்மீரில் வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் வீட்டின் முன்பு குண்டு வெடித்தத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடிபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சித்ரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள்:

இந்நிலையில் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்ரி என்ற கிராமத்திற்குள் பாதுகாப்பையும் மீறி நேற்று இரவு திடீரென புகுந்த பயங்கரவாதிகள், அங்குள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதையும் படிக்க: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு...உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

4 பேர் உயிரிழப்பு:

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 9க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

போராட்டம் நடத்திய பொதுமக்கள்: 

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்  ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பில் மாநில அரசு கோட்டை விட்டுள்ளதாக கூறிய போராட்டக்காரர்கள், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேரில் வந்து தங்களின் கோரிக்கைகளை கேட்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  

மீண்டும் குண்டுவெடிப்பு:

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் நிலவியது. 

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு படையினர் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் மர்ம பொருள் வெடிப்பு மற்றும் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.