மனதை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கோவையில் நடந்த கார் வெடி விபத்தில் கார் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகளும், ஜமேசா முபின் வீட்டில் இருந்து, மர்ம பொருள் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

மனதை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கோவை: உக்கடம் கோட்டைமேடு பகுதியில், நேற்று அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | முபின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது...

இந்நிலையில், காரில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டி இருந்து வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் சிக்கியுள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் உள்ளிட்ட 5 பேர், மர்ம பொருள் ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | அதிகாலையில் காருக்குள் சிலிண்டர் வெடித்து விபத்து.. 6 தனிப்படைகள் அமைப்பு - டிஜிபி சைலேந்திர பாபு

இதில் மற்ற 4 நபர்கள் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உக்கடம் கோட்டை மேடு பகுதியில் கார் வெடித்து சிதறும் சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனை கண்ட  அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. 

மேலும் படிக்க | தீபாவளி அன்று திடீர் தீ விபத்து... இரண்டு மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறை...