தீபாவளி அன்று திடீர் தீ விபத்து... இரண்டு மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறை...

அசோக் நகரில் ஒரு தனியார் மருந்து கிடங்கில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மணி நேர்ப் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படையினர்.
தீபாவளி அன்று திடீர் தீ விபத்து... இரண்டு மணி நேரம் போராடிய தீயணைப்புத்துறை...
Published on
Updated on
2 min read

சென்னை: அசோக் நகரில் உள்ள இரண்டாவது வானவில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து குடோனில் இன்று காலை 8 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதை அருகாமையில் இருந்த பொதுமக்கள் பார்த்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக தீயணைப்பு படையினர் விபத்து பகுதிக்கு விரைந்தனர்.

மேலும் கூடுதலாக அசோக் நகருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தியாகராய நகர் தேனாம்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மொத்தம் ஆறு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும் மருந்து குடோனில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகம் இருப்பதன் காரணமாக அந்தப் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கட்டிடத்திற்கு வெளியே நான்கு சக்கர வாகனத்தில் வைத்திருந்தது தான் காரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் கட்டிடத்திற்கு வெளியே இருந்த மருத்துவ உபகரணங்கள் சர்ஜிகல் மாஸ்க் சாணிடைசர் சர்ஜிகல் கிளவுஸ் உள்ளிட்டவை முற்றிலுமாக தீக்கிரியாக்கியது மேலும் ஒரு கார், சரக்கு வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனம் முழுமையாக தீக்கு இரை ஆகிவிட்டது.

தொடர்ந்து தீயினால் ஏற்பட்டிருக்கும் புகையை வெளியேற்ற மதினாவின் கருவிகள் மூலமாக தீயணைப்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர் அதற்குப் பிறகு விரிவான விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com