சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை... 3 பேர் கைது...

சோழவரத்தில் நடந்த இந்த கொலை சம்பந்தமாக அதே பகுதியச் சேர்ந்த 3 பேர் கைதாகியுள்ளனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை... 3 பேர் கைது...

திருவள்ளூர் | சோழவரம் அடுத்த விஜயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (28). இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அஸ்வின் சோழவரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பூதூர் கிராமத்தில் குடியேறிய அஸ்வின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று சொந்த ஊருக்கு வந்து உறவினர்களை பார்த்து விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

மேலும் படிக்க | பெண்ணுறுப்பில் டார்ச் நுழைத்து மனைவியைக் கொலை செய்த கணவன்...

அஸ்வின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வின் உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | கோவிலுக்குள் வைத்தே பூசாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம்...

மேலும் இந்த கொலை தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி அஸ்வின் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் காவல்துறையினர் தீவிர விசாரித்து வந்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த சரத், வினோத், வேலப்பன் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். இரு பிரிவுகளாக இருந்த நிலையில் ரவுடிசத்தில் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட்டு கொலை நடந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க | பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை...