பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை...

பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை...

மேலூர் காவல் சரகம் தும்பைபட்டியை ஊராட்சி கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் 40 வயதான செல்வநாதன். இந்திய ராணுவத்தில் தற்போது பஞ்சாபில் பகுதியில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊரான தும்பைட்டிக்கு விடுமுறையில் நேற்று வந்த நிலையில் இன்று காலை அவரது படுக்கையறையில் சேலையில் தூக்கிட்டவாறு  உயிரிழந்து கிடந்தார்.

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியுடன் நேற்றிரவு வீட்டில் கடும் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டதாக கூறப்படும்,நிலையில் காலையில் தூக்கில் தொங்கியபடி சடலமா கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மேலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் திருநாளை கொண்டாட விடுமுறையில் வீடு திரும்பிய ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இதற்கு இதுதான் முடிவா?!!