பெண்ணுறுப்பில் டார்ச் நுழைத்து மனைவியைக் கொலை செய்த கணவன்...

மலைவாழ் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் குறித்த விசாரணையில், அவரது கணவனே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.
பெண்ணுறுப்பில் டார்ச் நுழைத்து மனைவியைக் கொலை செய்த கணவன்...
Published on
Updated on
1 min read

விருதுநகர் | வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான 
அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனம் (எ) வனராஜ் (50). இவர்  இரண்டாவதாக ஏசுராணி (எ) உமா(26) வை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

ஏசுராணி(எ) உமாவிற்கு வனராஜ் இரண்டாவது கணவர் ஆவார். இவர்கள் வனராஜிற்கு முதல் திருமணத்தின் போது பிறந்த  இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர்.

வனம் (எ)வனராஜ் கான்சாபுரம் அத்திகோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து தோட்டத்தில் காவல் வேலை செய்து வந்துள்ளார்.

இரவு தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரது மனைவி உமா இருவரும் தங்கியுள்ளனர்.  காலை எழுந்து பார்த்தபோது ஏசுராணி (எ) உமா உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து வனராஜ் கூமாபட்டி காவல் துறையினருக்கு  தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையின் உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன்,வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர்  இந்த சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்த செய்த கூமாப்பட்டி காவல்துறையின் இறந்த உமாவின் கணவர் வனராஜிடம்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,

இரவு தங்கியிருந்த இடத்தில் தானும் தனது மனைவியும் மது அருந்திவிட்டு உடலுறவு கொண்டதாகவும், தன்னால் உடலுறவு கொள்ள முடியாத நிலையில் தனது கையில் இருந்த டார்ச் லைட்டை வைத்து மனைவியின் பெண்ணுறுப்பில் வேகமாக அழுத்தியதாகவும் இதனால் பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறி மனைவி இறந்து விட்டதாகவும்

வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய் கூமாபட்டி  காவல்துறையினர் வனராஜா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com