கோவிலுக்குள் வைத்தே பூசாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம்...

பூசாரி கோவிலுக்குள் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவிலுக்குள் வைத்தே பூசாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம்...
Published on
Updated on
1 min read

நெல்லை | கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேல சேவல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிட்டுசாமி வயது 55 இவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் கிட்டுசாமி கோவிலில் இருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கிட்டுச்சாமியை  அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கோவில் பூசாரி 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையான போலீசார் மேலச்செவல் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கிட்டு சாமியை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் எதிரொலியாக அப்பகுதியில் இரு தரப்பினர் இடையே  மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com