புலித்தோலை விற்க முயன்ற 4 பேர் கைது... குமரியில் பரபரப்பு...

புலித்தோலை விற்க முயன்ற 4 பேர் கைது... குமரியில் பரபரப்பு...

கோவையிலிருந்து புலித்தோல் ஒன்றை நாகர்கோவிலுக்கு கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்யப்போவதாக மத்திய வன உயிரின குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட வன அதிகாரி இளையராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவரின் உத்தரவின் பேரில் புலித்தோல் விற்க முயற்சிக்கும் கும்பல் குறித்து வனகாப்பாளர்கள் விசாரணை நடத்தி வந்து ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த கும்பல் நாகர்கோவிலில் அடுத்த தம்பத்து கோணம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க | சங்கரன்கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை... போராடும் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள்...

அதனை தொடர்ந்து தம்பத்து கோணத்தில் உள்ள வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறினர். மேலும் அந்த வீட்டில் சோதனை போட்டனர் அப்போது அங்குள்ள ஒரு அறையில் புலித்தோல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே புலித்தோலை பறிமுதல் செய்து அங்கு இருந்த இருவரை மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர் விசாரணையில் நாகர்கோவில் ராமபுரம் பகுதி சேர்ந்த செந்தில் சுப்பிரமணியன், மற்றும் தூத்துக்குடி சேர்ந்த இம்மானுவேல் தனராஜ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரமேஷ், நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும் படிக்க | ஒரிஜினல் என நினைத்து டூப்லிகேட் யானைகளை தாக்கிய பாகுபலி யானை...

இந்த நான்கு பேர்களை கைது செய்த நிலையில் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிக்கு ஒருவர் கூறுகையில்" கோவை மாவட்டத்திலிருந்து ஒரு நபரிடம் புலித்தோலை வாங்கி நாகர்கோவிலில் ரூபாய் 15 லட்சத்துக்கு விற்பனை செய்ய பேரம் பேசி உள்ளனர்.

இதற்காக புரோக்கராக செயல்பட்டவர்கள் தான் இந்த நான்கு பேர் என்பது தெரிய வந்ததுள்ளது மேலும் கோவையில் புலித்தோலை விற்பனைக்கு கொடுத்தது யார் என்பதும் அவர்களுக்கு புலித்தோல் எப்படி கிடைத்தது என்ற கோணங்களில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரசு பேருந்தை துரத்திய கபாலி யானை...! வைரலாகும் வீடியோ...!