சங்கரன்கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை... போராடும் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள்...

உடல் பலவீனமான யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளிக்கின்றனர். மேலும், யானையை இயல்புநிலைக்கு கொண்டுவர வனத்துறையினர் போராடுகின்றனர்.
சங்கரன்கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை... போராடும் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள்...
Published on
Updated on
1 min read

தென்காசி | வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வனப்பகுதியில் யானை புலி சிறுத்தை கரடி மான் உள்ளிட்ட பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினுள் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏதேனும் மிருகங்கள் அடித்துச் செல்லப்படாமல் தடுப்பதற்காக வனத்துறையினர் தீவிர அருந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நிலை சரியில்லாமல் மயங்கி படுத்திருந்ததை அவ்வழியாக ரோந்து பணியில் சென்ற புளியங்குடி வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் தகவலை மாவட்ட வன அலுவலருக்கு தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் கால்நடைத்துறை மருத்துவர் உடன் சென்று யானைக்கு  குளுக்கோஸ் அளித்து ஊசி செலுத்தி யானைக்கு சிகிச்சை அளித்து, பின்பு சிறிது நேரம் கழித்து யானை இயல்பு நிலைக்கு வந்தவுடன் வாழைப்பழம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

மேலும், யானையை முழுமையாக குணமடைந்து நடக்க வைக்கும் பணியில் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com