ரோட்டில் நிர்வாணமாக நின்ற புள்ளிங்கோ... வெளுத்து விட்ட பொதுமக்கள்..

100 அடி சாலையில் 2 சிறுவர்கள் போதையில் தகராறு செய்து பொதுமக்களுக்கு இடையூறு அளித்தனர். தடுக்க வந்த போலீசாரின் முன் நிர்வாணமாக நின்று எச்சரிக்கை செய்தவர்களுக்கு போலீசார் தக்க பதிலடி கொடுத்தனர்.

ரோட்டில் நிர்வாணமாக நின்ற புள்ளிங்கோ... வெளுத்து விட்ட பொதுமக்கள்..

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் சாதாரணமாகவே மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதி. அதிலும், மழை காரணமாக தற்போது பல நேரம் அங்கு போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு சுற்றித் திரிந்த இரண்டு சிறுவர்கள், வயதுக்கு மீறிய வேலையில் ஈடுபட்டு, தேவையான அளவிற்கு வாக்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்க | வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை...

தனது நிலை மறக்கும் வகையில் போதையாக சுற்றித் திரிந்த சிறுவர்கள் தங்களது செல்போன்களை சார்ஜ் போட அருகில் இருந்த கடைகளுக்குள் புகுந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு சார்ஜ் போட்டிருந்த போன்களை யாரோ ஒருவர் தூக்கிச் சென்றதாக அதிரடியான நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் இந்த குடிகார சிறுவன்கள்.

கோயம்பேடு 100 அடி சாலையில் 60 கி.மீ. வேகத்தில் சென்ற அரசு பேருந்தின் முன் பாய்ந்து சென்றான் ஒருவன். வெறும் பதின்மூன்றே வயதான அந்த சிறுவன் பஸ், கார் போன்ற வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதில் கோயம்பேடே கிடுகிடுத்தது. 

மேலும் படிக்க | சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மனு தாக்கல்...

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுவர்கள் செய்த அட்டகாசத்தைப் பார்த்து அதிர்ந்தனர். தங்களை கண்டிக்க வந்த போலீசாரை “நீ போலீசா, இல்லை கூர்க்காவா?” என கேள்வி எழுப்பி அவமானமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

அதோடு நிறுத்தாமல் தொலைந்து போனதாகக் கூறப்படும் தங்களது மொபைல்களை கண்டுபிடித்துத் தரவில்லை என்றால், அடுத்து என்ன் அனடக்கும் என்பது எனக்கே தெரியாது என அந்த சிறுவர்கள் மது போதையின் உச்சத்தில் பிரச்சனை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | சிறுவனுடன் காதல்... கல்லூரி பெண் கர்ப்பம்.. குழந்தை தனதில்லை என மறுத்ததால் பரபரப்பு...

அது மட்டுமின்றி, தன்னிடம் கத்தி அல்லது துப்பாக்கி போன்ற ஏதேனும் தாக்கும் பொருட்களை ஒளித்து வைத்திருப்பானோ என அச்சமடைந்த பொது மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தங்களது பேண்டுகளை நீக்கி, போலீசை மிரட்டியுள்ளனர் அந்த சிறுவர்கள். இதனால் கோபமடைந்த மக்கல் மற்றும் காவலர்களை அந்த சிறுவர்களை இழுத்துச் சென்று கவனிக்க வேண்டிய விதத்த்ல் கவனித்துள்ளனர்.

மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!

தன்னிலை மறந்து போதையில் மழை நேரத்தில் தத்தளித்து வந்த வழிதடுமாறிய சிறுவர்களை தர்ம அடி கொடுத்து திருத்த முயன்ற போலீசார், அவர்களைத் தூக்கிச் சென்று சிறையில் அடைத்தனர். விசாரணையில், அவருடன் இருந்த மற்றொரு சிறுவன் 17 வயது சிறுவன் என்றும், இருவரும் மெரினா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போதையேறி, புத்தி மாறி என்ன செய்வதென்று தெரியாமல், சிறுவயதிலேயே தங்களது வாழ்க்கையைக் கெடுக்கும் போதைக்கு அடிமையாகியட்க்ஹால், அவர்கள் மேல் கோபத்தையும் தாண்டி சிறிது பரிதாபம் தோன்றுகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | “நான் இந்த ஜாதி.. அப்படித்தான் கத்தி வச்சிருப்பேன்...”- காவலரை மிரட்டிய இளைஞர்...